Saturday 25 July 2009

True lies - மெய்யான பொய்கள்

நேற்று இரவு டீவீயில் true lies என்ற ஆங்கிலத் திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.நகைச்சுவை கலந்த ஒரு சின்னக் கதை,கதை வசனங்கள் , இயல்பான நடிப்பு ,விறு விறுப்பான காட்சிகள் என படம் தொடங்கி முடியும் வரை ரசிக்கும் படியாக இருந்தது.

true lies கதை :

கணவன் ஒரு அமெரிக்க புலனாய்வு துறை அதிகாரி. மனைவிக்கும் மகளுக்கும் இது தெரியாது.கணவன் ஒரு சாதாரண கம்ப்யூட்டர் ஸேல்ஸ்மன் என மனைவி நினைத்துக்கொண்டு இருப்பாள் , ஆனால் மனைவிக்கு வாழ்க்கையில் ஏதாவது த்ரில்லாக செய்ய வேண்டும் என்று ஆசை. இந்த ஆசையின் விளைவாக தன்னை புலனாய்வு துறை அதிகாரி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவனுடன் தொடர்பு வந்துவிடும். இதை அறியும் கணவன், மனைவியை தன் செல்வாக்கை பயன்படுத்தி புலனாய்வு செய்வான்.மனைவியின் நாண்பன் ஒரு சாதாரண கார் ஸேல்ஸ்மன்,அவன் பெண்களை வளைப்பதற்கு பொய் சொல்லிக்கொண்டு திரிபவன் என்பதை கண்டு பிடித்துவிடுவான்.அதோடு மனிவியின் ஆசையையும் அறிந்து கொள்வான்.மனைவியின் ஆசையை நிறைவேற்ற அவளை பொய்யான புலனாய்வு ஒன்றுக்கு அனுப்புவான்(அவளுக்கு இதுவரை கணவன் பற்றிய உண்மை தெரியாது ).

கடைசியில் மனைவிக்கு உண்மை தெரியவரும் போது இவர்களை தீவிரவாதிகள் பிடித்துக்கொண்டு சென்று விடுவார்கள்.கடைசியில் படம் சுபமாக முடியும்.

பி.கு

படத்தின் சில பகுதிகள் :

இன்னொரு காட்சி :(பிரெஞ்சு மொழி பெயர்ப்பு தான் கிடைத்தது )

Wednesday 15 July 2009

எனது ஆசை....

எப்போதும் தமிழில் எழுதுவது ஒரு சுவையான அனுபவம்.ஆனால் எனக்கு லாப்டோபில் தமிழில் எழுதுவது அது அவ்வளவு இலகுவாக இல்லை.ஆனால் அண்மையில் எனது நண்பியின் மூலம் கூகிள் உதவியுடன் இலகுவாக லாப்டோபில் தமிழில் எழுதுவது எப்படி என அறிந்துகொண்டேன் . எனது இந்த புதிய அனுபவத்தை மேம்படுத்திக்கொள்ளும் ஆவலின் பிரதிபலிப்பே இந்த blogg.

நீங்களும் விரும்பினால் இலகுவாக தமிழில் எழுதலாம் :http://www.google.com/transliterate/indic/Tamil